கவிதை

                                          நிழல்

நிழலின் அருமை வெயிலின் கொடுமைலையே தெரியும்
மரத்தடி நிழல் அது மனிதன் செய்த தவமாகும்
மரத்தை வெட்டும் மனிதா அதன்முன் மரத்தடி நிழலை நினைத்துப்பார்
சூரியன் தரும் நிழல் அது இரவாய் நம்மை தாலாட்டும்
உயிர் கொண்ட உறவுகள் உன்னை பிரியும் பொழுதும்
நிழல் மட்டுமே நிஜமாய் உன்னுடன் நின்றிடும்
கடைசிவரை யாரும் இல்லை என்ற பழமையை போக்கி
நிழல் நம்முடன் கடைசிவரை வந்து வென்றிடும்
தனிமை போக்கும் தவ புதல் தோழன் நிழல் மட்டுமே என்பேன் ...







                       இயற்கை

செயற்கை வாழ்க்கை வாழும் மனிதா இயற்கை நம்
அன்னைக்கு நிகரென்று எப்போது அறிவாய்
பள்ளங்கள் தொண்டி பணம் அல்லும் உனக்கு
ஆறடி பள்ளம் மட்டுமே சொந்தமென்று எப்போது புரிவாய்
தெள்ளிய நீர் ஒன்று தீர்க்கும் தாகத்தை
தேவாமிர்தமும் தீர்த்திடுமா ...
மரத்தடி நிழலுக்கும் மர இலைக்காற்றுக்கும் மனிதா
உந்தன் குளிர்க்காற்று பெட்டி ஈடு கொடுத்திடுமா
விளக்கை தேடும் விட்டில் பூச்சியை அழிவை தேடி
அல்லும் பகலும் அலைகிறது இந்த மனித இனம்... 





                            குழந்தை

மடியினில் கொஞ்சும் மழலை செல்வம்
மனிதரின் வாழ்வில் மாபெரும் இன்பம்
மொழியொன்றும் அறியா குழந்தயின் பேச்சு
பெற்றோருக்கு அதுவே இன்பத்தின் மூச்சு
குழந்தைகள் தவழும் வீடுகள் தினம்
மகிழ்ச்சிகள் நிறம்பிய இன்ப வனம்





                                                    தாய்

தெய்வத்திற்கு கோவில் கட்டும் மனிதர்கள் முன்னால்
வீட்டையே கோவிலாகும் தெய்வம் தாய்
உலகம் தொட்ட முதல் நொடியே தான் உறங்கிய கருவறை
படுக்கை தேடி அழும் நம்மை அரவணைக்கும் கடவுள் அன்னை
தன் குருதியை உணவாக்கும் தாயின் முன்னே உலகின்
உணவகங்கள் அனைத்தும் ஊமையாய் நின்றிடுமே
ஆயிரம் கோடி கொட்டி நீ கொடுத்தாலும்
ஆண்டவனாலும் அன்னையின் அன்பை தர முடியாது
உயிரினில் கலந்த ஓவியம் தாய்
உலகவர் இயற்றிட  முடிய அழகிய காவியம் அன்னை !!!


                                       இன்றைய கவிதை 
                                         -*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-

              நித்திரையிலும் உன் நினைவுகள் 


                           சித்திரை மாத வெயிலைப்போல் 


                                                கொல்லுதடி!!!
                                                                 

                                                                இது நியாயமா ???




No comments :

Post a Comment